MPAY-யின் வரலாறு


இயற்கையின் தற்போதைய செயல்முறைகள்


இயற்கையில் எல்லாமே பெரிய மற்றும் சிறிய சுழற்சிகளுக்கு உட்படுகின்றன, அவை தொடர்ந்து ஒரே வரிசையில் மீண்டும் நிகழ்கின்றன. இந்த சுழற்சிகளில் ஒன்று, மனிதர்கள் நேரடியாக அனுபவிக்கும் நான்கு பருவங்கள்: வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மற்றும் சில பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த சிறிய சுழற்சிகளைத் தவிர, மிகப் பெரியவைகளும் உள்ளன. இது வேத நூல்களில் நான்கு “யுகங்கள் (சகாப்த காலங்கள்) என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சகாப்தத்தின் காலமும் சராசரி மனிதனின் ஆயுட்காலத்தை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகம். "வேதம்" என்றால் "அறிவு" என்று பொருள். இது இணைப்புகள் மற்றும் இயற்கையின் கொள்கைகளின் உலகளாவிய மற்றும் காலமற்ற அறிவைக் குறிக்கிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறிவை வேதங்களை உருவாக்கிய ரிஷி வியாசர் எழுதியுள்ளார். தற்போதைய சகாப்தத்திற்கு அப்பால் அறிவைப் பாதுகாத்து அனுப்புவதே அவரது குறிக்கோளாக இருந்தது.

 

தற்போதைய சுழற்சி கலியுகம் (இருளின் வயது) என்று அழைக்கப்படுகிறது. இது அதன் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இது எல்லா காலங்களிலும் மிகவும் பொருள்முதல்வாத மற்றும் ஒழுங்கற்ற சகாப்தமாகும். இது போர், பிரிவினை மற்றும் மோதலைக் குறிக்கிறது. இது நீடிக்கும் வரை, மனிதகுலம் இயற்கையுடனும் மற்றும் இயற்கையின் கொள்கைகளுக்கும் இசைவாக வாழுவதில்லை. சுயநலம் மற்றும் பொருள்முதல்வாத விருப்பங்கள் மேலதிகமாக கொண்டிருக்கும். இயற்கையின் சீரற்ற ஆற்றல்கள் அதிகரித்து வருகின்றன.

 

தற்போது அனைத்து மக்களும், நமது கிரக பூமியும் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. இயற்கையின் பார்வையில், உலகமும் அதன் குழந்தைகளும் இந்த குறைந்த அதிர்வலை, குறைந்த ஆற்றல் மற்றும் மிகவும் சீரற்ற ஒரு கலியுக சகாப்தத்திலிருந்து, மாறாக, சத்தியுகத்திற்கு, அதாவது அதிக ஆற்றல், அதிக அதிர்வலை மற்றும் மிகவும் இணக்கமான ஒரு சகாப்தத்துக்கு மாறுகின்றன. சத்திய யுகத்தின் சகாப்தத்தில் (உண்மையின் காலம்) மக்கள் நிம்மதியாகவும், தங்களுக்குள் இணக்கத்துடனும், இயற்கையுடனும் மற்றும் இயற்கையின் கொள்கைகளுடனும் இணக்கமாக வாழ்வார்கள் . எனினும், புதிய சகாப்தத்திற்கு நாம் முழுமையாகச் செல்வதற்கு முன்னர், மக்கள் தங்களையும் பூமியையும் அனைத்து சுயநல நோக்கங்களிலிருந்தும் தூய்மைப்படுத்தும்படி கேட்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் அனைத்து உள் மற்றும் வெளிப்புற சீரற்ற ஆற்றல்களையும் விட்டுவிட வேண்டும்.


MPAY- மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த அன்பளிப்பு


இதில் நாம் ஆழமாக செல்வதற்கு முன், MPAY-யின் அன்பளிப்பு உண்மையில் மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிய, அதன் பின்னணியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வது அவசியம்.

 

இயற்கையில் உள்ள அனைத்திற்கும் ஒரு ஆன்மா உள்ளது: விலங்குகள், தாவரங்கள், மக்கள், மரங்கள், கிரகங்கள் போன்றவை. ஒவ்வொன்றின் ஆழ் உணர்வு ஒரு குறிப்பிட்ட அதிர்வலை மட்டத்தில் அதிர்வுறும். இந்த அதிர்வு அதிர்வலை யதார்த்தத்தை ஒவ்வொரு வாழும் உயிரிடத்திலும் மற்றும் அதன் உருவாக்கத்திலும் தீர்மானிக்கிறது. ஆழ் மனதின் அதிர்வலை நிலை உயர்ந்தால், நிபந்தனையற்ற அன்பு, நோக்கங்கள், உள்ளுணர்வு, தன்னலமற்ற தன்மை, மன்னிப்பு, உள் அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை ஒரு உயிரினம் உள்ளே கொண்டு செல்கின்றன. அதிக அதிர்வலைகள் என்பது உங்கள் உண்மையான உள்ளுணர்வு மற்றும் இயற்கையின் விதிகளுக்கு இணங்க வாழ்கிறீர்கள் என்பதாகும். அதிர்வலைகள் அதிகமாக ஏறும் போது, நீங்கள் மிக உயர்ந்த மூலத்தை நெருங்குகிறீர்கள். அதிர்வலைகள் குறைவாக இருக்கும்போது, ஆழ் மனது நிபந்தனை அன்பு, சுயநல நோக்கங்கள், உணர்ச்சிவசமான விஷயங்கள் மற்றும் பழைய காயங்களுடனான இணைப்புடன் விஷமாகிறது. மனதை மாற்றுவதற்கும் சுத்திகரிப்பதற்கும் ஒரு செயல்முறைக்கு உட்படுத்துவதன் மூலம் அதிர்வலைகளை அதிகரிக்க முடியும், எனவே அதிர்வலைகளை எதிர்மறையாக பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் அகற்ற முடியும்.

 

ஆன்மா உடலை விட்டு வெளியேறி ஆன்மீக பரிமாணங்களுக்குச் செல்லும்போது, அது பெரும்பாலும் அதன் ஆன்மா அதிர்வலையுடன் ஒத்திருக்கும் பரிமாணத்தில் இணைகிறது. பூமியில் வெவ்வேறு அதிர்வலை நிலைகள் இருப்பதைப் போலவே, ஆன்மீக உலகங்களுக்கும் இது பொருந்தும். எனினும், பூமியில் நம் காலத்தில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் அதிர்வலை அந்த நேரத்தில் அவர்களின் ஆழ்மனது எங்கு நிற்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், மாற்றுவதற்கான நிபந்தனையற்ற அன்பு, மன்னிப்பு போன்றவற்றின் உயர் மட்டத்தை அடைய வாய்ப்பு உள்ளது. இது ஆத்மா பரிசுத்த உலகங்களில் நிற்பதை மேம்படுத்துகிறது மற்றும் இது பூமியில் நாம் உண்டு பண்ணும் அனுபவங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் மறுபுறம் நாம் மாற்றிய பின், பின்னர் நாம் ஒன்றை உருவாக்கவும் போகிறோம்.

 

முழு பிரபஞ்சமும் ஆத்மாக்கள் மற்றும் உயிர்களால் நிறைந்திருப்பதால், உலகம் மற்றும் பரிசுத்த கிரகங்கள் இரண்டிலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள், அவை பூமியையும் மனிதகுலத்தையும் பாதுகாக்க வெவ்வேறு அதிர்வலை மட்டங்களில் இயங்குகின்றன. இந்த மாற்றத்தின் போது. இது இன்னும் அதிகமாகிறது. ஆகையால், ஒளி மிக்க கிரகங்களால் உருவாக்கப்பட்ட பல தேவதைகள், தேவதூதர்கள், அசென்டெட் மாஸ்டர்ஸ் மற்றும் பல மனிதர்கள் உள்ளனர், அவை உருமாற்ற செயல்முறைக்கு துணைபுரிகின்றன. வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த கிரகங்களுடனான நம்முடைய தொடர்பு அதிகரிக்கும் மற்றும் இயற்கையாகவே இந்த மனிதர்களுடன் ஒரு வகையான தொடர்புகளை உருவாக்குவோம்.

 

இயற்கையில் ஒரு இயற்கையான அமைப்பு படிநிலை உள்ளது. நிபந்தனையற்ற அன்பு, மன்னிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மை போன்ற ஆழ் மனதின் மிக சக்திவாய்ந்த குணங்களைப் பெற்றவர்கள் மிக உயர்ந்த இருப்பில் செயல்படுகிறார்கள். மிகுந்த இரக்கம், தூய்மை, பரிவு, நல்லிணக்கம் மற்றும் நிபந்தனையற்ற அன்பு ஆகியவற்றால் அவற்றின் சாராம்சம் வியாபித்திருக்கிறது. ஒரு உயிரினத்தின் அதிர்வலை நிலை உயர்ந்தால், பூமிக்கும் மனிதகுலத்திற்கும் அவர்களின் ஆசீர்வாதம் உயர்ந்தது மற்றும் அதிகமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒளி நிறைந்த மிக உயர்ந்த இருப்பில் இயங்கும் மற்றும் மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கு காரணமான மனிதர்கள், 19 சித்தர்கள். “சித்தா” என்றால் “முழுமை” என்று பொருள். அந்த மனிதர்கள் எல்லா மதங்களிலிருந்தும் சமய மரபிலிருந்தும் தனித்து இருக்கிறார்கள், மேலும் மிக உயர்ந்த நிலையில் ஆழ் மனதை உள்வாங்கிக் கொண்டுள்ளனர். பூமிக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான ஆற்றல்மிக்க சமநிலையை பராமரிக்கவும் பாதுகாக்கவும் அவர்கள் அயராது உழைக்கிறார்கள். 

 

இந்த மிக உயர்ந்த அதிர்வலைகளிலிருந்து, மனிதகுலம் இந்த காலத்தின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த அன்பளிப்புகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுள்ளது, அதுதான் MPAY. சுய விடுதலை மற்றும் சுயநிறைவுக்கான நம் பாதையில் நமக்கு ஆதரவளிக்க விதிக்கப்பட்டுள்ளது.


பனை ஓலை நூலகங்கள் என்றால் என்ன?


பனை ஓலை நூலகங்கள் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு பெரிய முனிவர்களான சப்த ரிஷிகளால் நிறுவப்பட்டன. «சப்த» என்றால் «ஏழு». ஒரு ரிஷி என்பவர் ஒரு «தீர்க்கதரிசி», தெய்வீக மூலத்திலிருந்து மிக உயர்ந்த ஆன்மீக மற்றும் முழுமையான அறிவு (எல்லா நேரங்களிலும் செல்லுபடியாகும் அறிவு) அன்பளிப்பைப் பெற்றவர் மற்றும் இந்த அறிவை தூய்மையான, உண்மையான வழியில் கற்பிப்பவர். அகஸ்திய ரிஷி மிகப் பழமையான வேத நூல்களில் சப்த ரிஷிகளில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். அவர் இந்தியாவில் பனை ஓலை நூலகங்களை நிறுவியவர்களில் ஒருவர்.

 

பனை ஓலை நூலகங்கள் ஒரு பெரிய மர்மம், இது இன்றைய பொருள் உலக பார்வைக்கு முற்றிலும் முரணானது. இங்கே, இன்று வாழும் மில்லியன் கணக்கான மக்களின் ஆன்மா பயணங்கள் ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவிர, பனை ஓலை நூலகங்கள் மனிதகுலத்தின் உண்மையான தோற்றத்தின் நினைவகம் மற்றும் பாதுகாவலர் ஆகும், ஆனால் இது ஒரு அறிவாக மட்டுமே உலகின் பெரும்பகுதி ஒரு தவறான கருத்தில் இந்த நேரம் வரை அறியப்படுகிறது. மொத்தத்தில் பன்னிரண்டு பனை ஓலை நூலகங்கள் இந்தியா முழுவதும் உள்ளன.

 

இரண்டு வகையான பனை ஓலை நூலகங்கள் உள்ளன: நாடி சாஸ்திரம் மற்றும் ஜீவ நாடி. நாடி சாஸ்திரம் நமக்குத் தெரிந்த ஒரு உண்மையான நூலகத்தைப் போன்றது. தகவல் பனை ஓலைகளில் எழுதப்பட்டுள்ளது. சில சுவடிகள் 400 ஆண்டுகள் வரை பழமையானவை, அவை இன்னும் விரும்பியவர்களுடன் பகிர காத்திருக்கின்றன. ஜீவ நாடி என்பது ஆன்மீக உலகத்துடனான ஒரு நேரடி தொடர்பு. அங்கு, அகஸ்தியர் போன்ற பல்வேறு ரிஷிகள், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நுட்பமான உலகத்திலிருந்து தகவல்களை அனுப்புகிறார்கள். அந்தச் செய்திகள், சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு நாடி வாசகரால் பெறப்பட்டவை அல்லது அந்த வார்த்தைகள் பனை ஓலைகளில் தோன்றும். MPAY-வை சுற்றியுள்ள அனைத்து செய்திகளும் தகவல்களும் பனை ஓலை நூலகங்களிலிருந்து வருகின்றன, மேலும் அவை ஆன்மீக உலகத்துடனும் பூமியின் தற்போதைய முன்னேற்றங்களுடனும் இணக்கமாக தொடர்பு கொள்ளப்படுகின்றன.


ஸ்டீபனி பங்க் பற்றி


வெளி பயணம்

நான் 1982 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் சிறிய நகரமான ஹாக்ஸ்டரில் ஒரு சிறிய மரச்சட்ட வீட்டில் பிறந்தேன். உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, கல்லூரியில் உளவியல் படித்தேன். நான் எனது டிப்ளோமாவைப் பெற்றதும், ஜெர்மனியின் ஆல்கோ பிராந்தியத்தில் குடும்ப மற்றும் வாழ்க்கை ஆலோசகராக கரிட்டாஸில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன். அந்த நேரத்தில், நான் ஒரு யோகா ஆசிரியராவதற்கு பகுதி நேரமாக படித்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக நான் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு நபர் மற்றும் குழு யோகா பாடங்களை அளித்து வருகிறேன். எனது ஆன்லைன் யோகா பள்ளியை              www.online-yogaschool.com இல் பார்க்க தயங்க வேண்டாம்

 

டிசம்பர் 2015 முதல் நான் ஜெர்மனியின் பிர்ன்ஸ்டீனில் உள்ள ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமியில் இணை பேராசிரியராக இருக்கிறேன். தியான பயிற்சிக்கான பயிற்சி திட்டத்தை நிறுவிய குழுவில் நான் ஒரு பகுதியாக இருந்தேன். கூடுதலாக, நான் உளவியல் மற்றும் ஆயுர்வேத துறைகளில் அதிகமான விரிவுரைகளை வழங்குகிறேன். அகாடமியில் நான் ஒரு ஆயுர்வேத உளவியல் சிகிச்சையாளராக ஆக 3 ஆண்டு படிப்பை முடித்துள்ளேன். நான் விரைவில் ஒரு யோகா சிகிச்சையாளராக ஆக இருக்கிறேன், அது தவிர, 2019-ல் ஆயுர்வேத மருத்துவம் படிக்கத் தொடங்கினேன். நான் ஒரு எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞரும் கூட.

 

இந்த அனுபவங்கள் அனைத்தும், யோகா, ஆயுர்வேதம், தியானம், உளவியல் சிகிச்சை, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஹீலிங் ஆகிய துறைகளில் உள்ள எனது அறிவு அனைத்தும் ஒரு ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையை உருவாக்க எனது பணியில் ஒன்றாகப் பாய்கின்றன. உங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், உங்கள் இதய யாத்திரைக்கு உங்களை ஆதரிப்பதற்கும் மற்றும் ஊக்குவிப்பதற்கும் நான் எதிர் பார்க்கிறேன்.

 

உள் பயணம்

2011 ஆம் ஆண்டு வரை நான் ஒப்பீட்டளவில் சாதாரண வாழ்க்கையை நடத்தினேன். எனக்கு ஒரு பெரிய வேலை இருந்தது, நீண்டகால உறவுமுறையில் இருந்தேன். என் வாழ்க்கை வெளியில் சரியானதாகத் தோன்றினாலும், அங்கே வேறு ஏதோ எனக்காக காத்து இருக்கிறது என்று என் இதயத்தில் ஆழமாகத் தெரிந்தது.

 

பின்னர், 2011-இல், என் இதயம் அதன் உள் அழைப்பைப் பெற்றது, இது என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் ஒரு வாழ்க்கைச் சுழற்சி முடிவடைந்து வருவதையும், இந்த அழைப்பைப் பின்பற்றுவது எனக்கும் மற்றும் எனது பயணத்திற்கும் இன்றியமையாதது என்பதையும் நான் அறிந்தேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு மெக்ஸிகோவில் ஒரு வருடம் கழிக்க முடிவு செய்தேன். இங்குதான், கொஞ்சம் கொஞ்சமாக, என் இதயத்தின் குரல் என் எதிர்கால வழியை எனக்கு வெளிப்படுத்தியது. மெக்ஸிகோவில் நான் இருந்த காலத்தில் நான் பல பழைய மாயன் மற்றும் ஆஸ்டெக் மரபுகளைக் கற்று கொள்ளும் பாக்கியசாலி ஆனேன். அந்த எதிர்கால நுண்ணறிவு எனது எதிர்கால பயணத்திற்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. இருப்பினும், நான் பிற்காலத்தில் இந்தியாவில் செலவழிக்கும் காலத்தில் மட்டுமே இந்த அனுபவங்களின் பெரிய காட்சியையும் மற்றும் உண்மையான தாக்கத்தையும் நான் புரிந்துகொள்வேன்.

 

2013 ஜனவரியில் நான் ஜெர்மனிக்கு ஒரு குறுகிய காலத்திற்கு இருக்க திரும்பினேன். ஆனால் அதே ஆண்டு ஆகஸ்டில் எனது பயணம் என்னை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அடுத்த 5 மாதங்கள் கழித்தேன். எனது ஆன்மீக ஆசிரியர்களான அகஸ்திய ரிஷி மற்றும் லுபாமித்ரா ஆகியோர் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது இங்குதான். மெக்ஸிகோவில் நான் ஏற்கனவே உணர்ந்த அந்த உள் வழிகாட்டுதல், எனது கற்பனையின் ஒரு பகுதியாக இல்லை, அது உண்மையானது, இப்போது அதற்கு ஒரு பெயர் உண்டு. அக்டோபர் 2013 முதல் எனது ஆன்மீக பயணம் இந்தியாவில் உள்ள பனை ஓலை - நூலகத்தால் வழி நடத்தப்படுகிறது. 

 

ஜனவரி 2014-இல் நான் இந்தியாவில் இருந்து திரும்பி, மே 2014-இல் கான்ஸ்டன்ஸ் ஏரியில் மார்க்டோர்ஃப் நகரில் யோகா மற்றும் சித்தா மையத்தைத் திறந்தேன். அதே வருடத்தில்தான் மற்றவர்களுக்கு MPAY தீட்சைகளை அளிக்கும் திறனுடன் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

11/19/2019 அன்று நான் ஐரோப்பா வழியாக 2.5 மாத நீண்ட பயணத்திற்கு சென்றேன். அந்த 2.5 மாதங்களுக்குள் என்னால் 13 நாடுகளுக்குச் செல்ல முடிந்தது. நான் ஜனவரி 2020 இறுதியில் எனது பயணத்திலிருந்து திரும்பினேன். இந்த அர்த்தமுள்ள நேரத்தின் போது, என்னை ஆழமாக நகர்த்திய அற்புதமான என் அனுபவங்களை எல்லா இடங்களிலிருக்கும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள மற்றொரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற உந்துதல் எனக்கு கிடைத்தது. இது எனது தற்போதைய முயற்சிகளில் ஒன்றாகும். நான் தற்போது ஆவி உலகின் உதவியுடன் இந்த புத்தகத்தை எழுதுகிறேன்.

 

நூலாசிரியர்: 
Stephanie Bunk (2020)