அனுபவங்கள்


  •  "இந்த இலகுவான மற்றும் பயனுள்ள பயிற்சியை எடுத்ததையிட்டு நன்றியுடையவனாக உள்ளேன். இதை அன்றாட வாழ்க்கையில் மிகவும் வேகமாக உள்வாங்கிக்கொண்டேன். ஏனைய வழிமுறைகளை முயற்சித்தும் பலனை காணாதிருந்தப்போதிலும், இது எனது வாழ்க்கையில் ஒரு சீரான மாற்றத்தை கொண்டுவந்தது. உள அமைதி அதிகரித்ததையும் சூழலுக்கு ஏற்றது போல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதிலும்,  ஆழ் மனதில் ஏற்படும் குழப்பங்களை சரி செய்யவும் இது  உதவியது. எனது உணர்வுகளின் படி, எனது நடத்தைகளில் சீரான மாற்றத்தை கண்டுக்கொண்டேன்." (Juliane L. Freiburg, Germany)
  • <<மஹா பூர்ண ஆத்மா யோகாவின் ஆரம்பத்தில் நான் ஆழமாகவும், அற்புதமாகவும், தியான நிலையில் இருந்ததை உணர்ந்தேன். பின்னர் எனது அன்றாட வாழ்வில் நிம்மதியாகவும் வலிமையாகவும் இருப்பதை அவதானித்தேன்.  நான் நுணுக்கமாக இருக்க இந்த பயிற்சி அதிகமாகவே உதவுகின்றது.>> (Michaela S., Heiligenberg, Germany)     
  •  <<மஹா பூர்ண ஆத்ம யோகாவின் பயிற்சியால் எனக்குள் ஒரு நிம்மதியை உணர்கின்றேன். எனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பார்த்து, நான் என் மீதே  அன்புக்கொண்டேன். தனிமையில் இருக்கும் பொது கூட நன்றாக உணர்கிறேன்.>                                 (Maria S., Deggenhausen, Germany)
  • <<மஹா பூர்ண ஆத்மா யோகாவை ஆரம்பித்த பின் நான் பரிபூரணமாணவனாக உணர்கின்றேன். நான் என் மேல் வைத்திருக்கும் உறவு இன்னும் இன்னும் அதிகரிக்கின்றது. என் வாழ்க்கை செழிப்பாக உள்ளது. (Silvia F., Fischbach, Germany)       
  • <<நவம்பர் 2015 இல் நான் மஹா பூர்ண ஆத்ம யோகாவை ஆரம்பித்த பொது அதிகமான மாற்றத்தை உணரவில்லை. எப்படியிருந்தாலும், ஜனவரி 2016 இன் பின் தொடர்ந்து  பயிற்சி பெற்றபோது எனக்குள் நிம்மதியும், அமைதியும் ஏற்பட்டதை உணர்ந்தேன். திடீரென அனைத்து வேலைகளும் இலகுவானது (Heidelinde H., Friedrichshafen, Germany)
  •  <<இன்று எனக்கு வயது 56 ஆகின்றது, அழகான மற்றும் ஒழுங்கான முறையில் எனது வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கின்றது. 50 வயதாகிய பொது எனக்கு தோல் புற்று நோய் இருப்பதை வைத்தியர்கள் இனங்கண்டனர். அத்தோடு எனக்கு இரண்டு ஆண்டுகளே ஆயுற்காலமாக இருந்தது. இதை கண்டறிந்த பின்னர் எனது வாழ்க்கை மிகவும்  குழப்பமானது. பின்னர், என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் எனக்கு நானே போறுப்பேற்றுக்கொண்டேன் சுய சிகிச்சை பற்றிய நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டேன் அவசரமாக பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளில் இருந்து தவிர்ந்துக்கொண்டேன் 34 வருட கலியான வாழ்விற்க்கு பின் விவாகரத்தானது இன்று புற்றுநோயில் இருந்து குனமாகிவிட்டேன் . எனது நம்பிக்கை பலமாக நின்று எனக்கு உதவியது. மஹா பூர்ண ஆத்ம யோகா தேவையற்ற உணர்வுகள், அதாவது அகங்காரத்தால் ஏற்பட்ட பயம், படிப்படியாக குறைவதை உணர்ந்தேன். நான் இன்று நிம்மதியை உணர்ந்ததையிட்டு , இயலுமான எல்லோருக்கும் இந்த பயிற்ச்சியை எடுக்குமாறு பரிந்துரை செய்தேன்.>> (Urs H., Zurich, Switzerland)
  •  <<இதன் ஆரம்பத்தில் இது போன்ற சிறந்த பரிசொன்றை பெற்றதையிட்டு நன்றிக்கடன்பட்டுளேன். நான் என் மீது கொண்ட தொடர்பு அதிகரிப்பதை உணர்கின்றேன். பழைய விடயங்களை மறப்பதற்கு இது உதவியாக இருந்தது.>>                                                  (Andrea M., Friedrichshafen, Germany)
  • <<மஹா பூர்ண ஆத்மா யோகாவின் பயிற்சி மூலம் என் மீது எனக்கு நெருக்கம் அதிகம் உருவாவதை உணர்கின்றேன். எனது நம்பிக்கையும் வளரந்து, பயமில்லாமல் பாதுகாப்பாக உள்ளதை அவதானிக்கின்றேன். உலகில்,எனக்கென இருக்கும் இடம் இது  என்பதை அறிந்துக்கொண்டேன். இந்த பயிற்சி எடுத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, இது அன்றாட வாழ்க்கையில் இலகுவாக தாக்கம் செலுத்தக்கூடியதொன்றாகும்.>> (Meike E., Bielefeld, Germany)