மஹா பூர்ண ஆத்ம யோகா என்றால் என்ன?

<<மஹா பூர்ண ஆத்ம யோகா>> என்றால் <<ஆன்மாவை தூய்மைப்படுத்துதல்>>. இது இயற்கையாக ஏற்படும் அதிகளவிலான உணர்ச்சிகளின் போது வெளிப்படும் எதிர்வினை செயற்பாடுகளை வெளிப்படா வண்ணம் ஆழ் மனதினை பரிசுத்தப் படுத்தும் செயற்பாட்டுக்கு பங்களிப்பு செய்யும் பயிற்சியாகும்  . பயம் பேராசை, அவமானம், கோபம், பொறாமை மற்றும் இதுபோன்ற பல அம்சங்கள் இதில் உள்ளடங்கும். இது போன்ற உணர்வுகள் ஆழ்மனதுடன் தொடர்புப்படும் பொது இதற்கு சம்ஸ்கரஸ் என்றும் கூறுவர். அவர்கள் வெளிச்சம்-நிறைந்திருக்கும் உணர்வை மாற்றிக் கொள்வதால்  சமநிலையில் இருந்து வீழ்வதே அவர்களின் அக வளர்ச்சியை பாதிக்கின்றது.இம் மஹா பூர்ண யோகா வின் பயிற்சி, பயங்கரமான எதிர்வினைகளை நிலைமாற்றுவதில் ஒரு பலமான  தாக்கத்தை செலுத்துகின்றது. அதை இலகுவாக அகற்ற ஒரு சிறந்த  வழிமுறையாக இது திகழ்கின்றது . இது உங்கள் உள்ளத்தில் அமைதியை கொண்டுவருவதோடு, இணக்கமான பதில்களை கூறும் பண்பையும்  வளர்க்கின்றது. இணக்கமுள்ள செயற்பாடுகளை உள்ளத்தால் எடுத்து செயற்படும் போது ஒற்றுமை, அன்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்ட வாழ்க்கை உருவாகும். உலகளாவிய ரீதியில் இந்த பயிற்சி இருக்கின்றது, அன்றாட வாழ்க்கையில் இது பற்றிய முன்னைய அறிவேதும் இல்லாமல் அனைவராலும் இப்பயிற்சியை செய்யலாம்.

 

மஹா பூர்ணஆத்மா இன்னுமொரு செயற்பாட்டையும் பூரணப்படுத்துகிறது. இது உங்கள் ஆன்மாவை பரிசுத்தப்படுத்த உதவுவது மட்டுமல்லாது, எமது உணர்வுகளில் உள்ள தீய சக்திகளையும் அழிக்கும்.

 

மஹா பூர்ண யோகாவுடன் வளருங்கள்...

...உள அமைதி

மஹா பூர்ண ஆத்ம யோகாவின் பயிற்சி சமநிலையைப் பேண உதவுவதுடன் உள அமைதியையும் உண்டாக்கும்.

 

...உங்கள் திறன்

மஹா பூர்ண ஆத்ம யோகா உங்கள் வலிமையை வளர்க்க உதவுவதுடன், உங்கள் ஆன்மாவின்  இயற்கை அறிவையும் வளர்க்கும்.

 

...உள சுதந்திரம்

மஹா பூர்ண ஆத்ம யோகாவின் பயிற்சி பயம், உள அமைதியற்ற உணர்வுகள் மற்றும் எம்மை அழிக்கக்கூடிய இயல்புகளில் இருந்தும் நிம்மதி பெற உதவும்.

 

...மகிழ்ச்சி

மஹா பூர்ண ஆத்ம யோகாவின் பயிற்சி அளவில்லா இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.